இந்திய அரசியலமைப்பு

இந்திய அரசியலமைப்பு (ஆங்கிலம்: Constitution of India) என்பது இந்தியாவின் உயர்ந்தபட்ச சட்டமாகும். உலகின் மிகப்பெரிய குடியரசு நாடான சுதந்திர இந்தியாவின் அரசியலமைப்பு, உலகிலேயே மிக நீளமான அரசியலமைப்பாகும். இஃது எழுதப்பட்டுச் சட்டமாக்கப்பட்ட அரசியலமைப்பு, நெகிழாத் தன்மையும் நெகிழ்ச்சித் தன்மையும் உடையது, கூட்டாட்சியும் ஒருமுகத்தன்மையும் கொண்டது, பொறுப்புள்ள அரசாங்கத்தை உடையது என்று பல சிறப்பம்சங்களைக் கொண்டது. இஃது அடிப்படை அரசியல் கொள்கைகள், அரசாங்க நிறுவனங்களின் கட்டமைப்பு, நடைமுறைகள், சக்திகள், மற்றும் அடிப்படை உரிமைகள், உத்தரவுக் கொள்கைகள், குடிமக்களின் கடமைகள் ஆகியவற்றின் கட்டமைப்புகளை உள்ளடக்கியுள்ளது. இது தான் இதுவரை உலக நாடுகளின் இடையே எழுதப்பட்டதில் மிக நீண்ட அரசியலமைப்பாகும். இதில் மொத்தம் 25 பிரிவுகள், 12 அட்டவணைகள், 104 திருத்தங்கள், 448 உட்பிரிவுகள்(Articles) மற்றும் 117,369 சொற்கள் உள்ளன. இது ஆங்கிலப் பதிப்பைத் தவிர, ஒரு அதிகாரப்பூர்வ இந்தி மொழிபெயர்ப்பினையும் கொண்டுள்ளது. இந்திய அரசியலமைப்பை உருவாக்கும் பணி 29 ஆகஸ்ட் 1947 அன்று முதல் இந்திய அரசமைப்பு நிர்ணய மன்றத்தால் தொடங்கப்பட்டது. முழுமையடைந்த அரசியலமைப்பு 1950 ஆம் ஆண்டு ஜனவரி 26 அன்று நடைமுறைக்கு வந்தது. (இத்தேதி 26 ஜனவரி 1930, முழு தன்னாட்சி சாற்றல் நினைவாகத் தேர்வு செய்யப்பட்டது). இதன் மூலம் இந்தியா ஓர் ஒருங்கிணைந்த, தன்னாட்சி கொண்ட, குடியரசின் மக்களாட்சிக் கோட்பாட்டின்படி வழிநடத்துகின்ற நாடாக அறிவித்துக் கொண்டது. நடைமுறைக்கு வந்த பிறகு, அதுவரை நாட்டின் அடிப்படை நிருவாக ஆவணமாக இருந்த இந்திய அரசு சட்டம், 1935 என்னும் சட்டத்திற்குப் பதில் இந்திய அரசியலமைப்பு நாட்டின் அடிப்படை நிர்வாக ஆவணமாக மாற்றியது. அரசியலமைப்புக்கு வலுசேர்க்கும் விதமாக 1976-இல் நடைபெற்ற திருத்தங்களில் இந்தியா பொதுவுடைமை, மதச்சார்பின்மை மற்றும் நேர்மை இவைகளைத் தன் கொள்கைகளாக அறிவித்தது. இந்தியா தனது அரசியலமைப்பின் ஏற்பை ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 26-ஆம் தேதியைக் குடியரசு நாளாகக் கொண்டாடுகிறது.

இந்திய அரசியலமைப்பு – அரசியலமைப்பின் முன்னுரை – அரசியலமைப்பின் முக்கிய அம்சங்கள் – யூனியன், மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசம்.
குடியுரிமை, அடிப்படை உரிமைகள், அடிப்படைக் கடமைகள், மாநிலக் கொள்கையின் வழிகாட்டுதல் கோட்பாடுகள்.
யூனியன் எக்ஸிகியூட்டிவ், யூனியன் லெஜிஸ்லேச்சர் – மாநில நிறைவேற்று, மாநில சட்டமன்றம் – உள்ளாட்சிகள், பஞ்சாயத்து ராஜ்.
கூட்டாட்சியின் ஆவி: மத்திய-மாநில உறவுகள்.
தேர்தல் – இந்தியாவில் நீதித்துறை – சட்டத்தின் ஆட்சி.
பொது வாழ்வில் ஊழல் – ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகள் – லோக்பால் மற்றும் லோக்ஆயுக்தா – பெண்களுக்கு தகவல் அறியும் உரிமை – நுகர்வோர் பாதுகாப்பு மன்றங்கள், மனித உரிமைகள் சாசனம்.

You missed